இந்து உணர்வுகளை புண்படுத்திய நயன்.. நெட்பிளிக்ஸில் இருந்து அன்னபூரணி படம் நீக்கம்..!

Author: Vignesh
11 January 2024, 12:28 pm
nayanthara - updatenews360.jpg 2
Quick Share

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

nayanthara vignesh shivan

சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்துள்ள அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .

அடுத்ததாக நயன்தாராவின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “LIC” ( லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். இப்படத்தை ரூ. 60 கோடி பட்ஜெட்டில் லலித்குமார் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அக்காவாக நடிக்கப்போகும் நயன்தாராவின் ரோலுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

annapoorani

இந்நிலையில், அன்னபூரணி படத்தில் இந்துமத நம்பிக்கைகளை தவறாக காட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரை அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸில் இடம்பெறாது என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறப்பட்ட புகாரில் அன்னபூரணி படத்துக்கு எதிராக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை காவல் நிலையத்தில் சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி அளித்த புகாரில் நயன்தாரா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் நயன்தாரா மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறாராம்.

Views: - 214

0

0