Pandarathi Puranam Lyric Video Song: கரகாட்டக்காரியுடன் குத்தாட்டம் போட்ட தனுஷ்: வைரலாகும் பண்டாரத்தி புராணம் லிரிக் வீடியோ!

2 March 2021, 9:05 pm
Quick Share

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் பட த்தின் 2ஆவது சிங்கிள் டிராக் பண்டாரத்தி புராணம் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தி உருவாகியுள்ள கர்ணன் பட த்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.
இந்தப் பட த்தில் தனுஷுடன் இணைந்து லால், யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், ரஜிஷா விஜயன், கௌரி கிஷான், லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமௌலி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியானது. கண்டா வரச்சொல்லுங்க என்ற அந்த பாடல் லிரிக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், கர்ணன் படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் பண்டாரத்தி புராணம் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பண்டாரத்தி புராணம் என்ற பாடலுக்கு யுகபாரதி பாடல் வரிகள் எழுதியுள்ளார். தேனிசை தென்றல் தேவா இந்தப் பாடலை பாடியுள்ளார். ஒப்பாரி பாடல் போன்று இந்த பண்டாரத்தி புராணம் பாடல் அமைந்துள்ளது. பண்டாரத்தி புராணம் பாடலின் பாடல் வரிகள் இதோ…


என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி
கலங்கடிச்ச சக்காலத்தி…

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி
கலங்கடிச்ச சக்காலத்தி…

என் கக்கத்துல
என் கக்கத்துல
வச்ச துண்ட
தோலு மேல போட்டுவிட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்த ஏத்திவுட்டா….

என் கக்கத்துல
என் கக்கத்துல
வச்ச துண்ட
தோலு மேல போட்டுவிட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்த ஏத்திவுட்டா….

அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி சொட்டழகி
கதைய கேளு
ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு…

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி
கலங்கடிச்ச சக்காலத்தி…
என் ஆளு பண்டாரத்தி…

வல்லநாட்டு மலையோரம்
வாரம் ஒரு தரம் பாத்தோம்
முள்ளுக்காட்டு மூட்டோரம்
மூச்சு முட்ட தேனெடுத்தோம்
கக்குலத்து பக்கத்துல
காலசாமி கோயிலில
சாதியதான் பலிகொடுத்து
சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்…
என் பண்டாரத்தி…
என் பண்டாரத்தி…
ஏமனோட
வீட்டு வெளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல
யான மேல ஏத்துனா…

அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி
பொட்டழகி
கதைய கேளு..
ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு…

கருப்பந்துறை மண்ணெடுத்து
கார வீடு கட்டிக்கிட்டோம்
நாய்க்குட்டி நாலெடுத்து
குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம்

பாதகத்தி சாதிசனம்
வேலெடுத்து வாருமுன்னு
வாலெடுத்து சண்டையிட
வாசலில காத்திருந்தேன்

என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி
என் பண்டாரத்தி உடம்புக்குள்ள
என்ன எழவு புகுந்துச்சோ
காலரானு வந்த நோயி
எமன் கண்ணெதிரே தின்னுடுச்சே

என் மொட்டழகி
பொட்டழகி
கதைய கேளு
ரவுட்டு வண்டுக்கு
ரவுட்
ரவு…
என்று பண்டாரத்தி புராணம் பாடல் முடிகிறது.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கர்ணன் படம் திரைக்கு வர இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் உருவான பட்டாஸ் படம் வெளியானது. ஆனால், இந்தப் படம் போதுமான வரவேற்பு பெறவில்லை. தற்போது, அதிக எதிர்பார்ப்புடன் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாக்கப்பட்ட கர்ணன் படம் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 281

6

2