ஒரு படம் தான் ஹிட் ஆனதுக்கே ஓவர் பந்தா காட்டும் கவின் – சம்பளம் விஷயத்தில் கறார்!

Author: Shree
10 May 2023, 7:41 am
kavin
Quick Share

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்களுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த கவின் லிப்ட் திரைப்படத்தில் நடித்து முகம் அறியப்பட்டார்.

அதன் பிறகு டாடா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ் அவருக்கு ஜோடியாக நடித்தார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டாடா திரைப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி ஓடிடியிலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் வாரி குவித்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கவினுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதன்படி அடுத்து அவர் நடிக்கும் படத்திற்கு ரூ. 2 கோடி ருபாய் சம்பளம் கேட்கிறாராம். அதனால் அவரை ரூ. 1 கோடிக்கு கமிட் செய்த நிறுவனம் தற்போது பின்வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் ஒரே ஒரு படம் ஹிட் ஆனதும் கவின் இப்படி மாறிவிட்டாரே என சினிமா வட்டாரத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

Views: - 468

0

0