“தீ” குரலில் தீ பறக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் “கொம்பரி வேட்டபுலி” பாடல்!

Author: Rajesh
9 January 2024, 12:31 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் , பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகியது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு லிரிக்கல் பாடல்கள் வெளியாகிது. தொடர்ந்து இப்படத்தை குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. பின்னர் தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை பல மடங்கு அதிகரித்தது.

குறிப்பாக தனுஷின் வெறித்தனமான நடிப்பு மிரட்டி எடுக்கிறது. ட்ரைலரில், நீ யாரு உனக்கு என்ன வேண்டும் என்பதை பொறுத்து நான் யார் என்பது மாறும்” என தனுஷ் பேசும் டயலாக் தேறி மாஸாக இருந்தது. அந்த ட்ரைலர் நம்பர் ஒன் ட்ரண்ட் ஆனதை தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படத்தின் “கொம்பரி வேட்டபுலி” என்ற ரொமான்டிக் லிரிகள் பாடல் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல பாடகி தீ பாடியுள்ளார். இதோ அந்த வீடியோ:

  • Archana and Arun love story காதலர் தினத்தில் ஆட்டம் போட்ட பிக் பாஸ் அர்ச்சனா…வைரலாகும் வீடியோ.!