பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன் – வாழ்த்தும் ரசிகர்கள்..!

Author: Vignesh
8 February 2024, 10:17 am
lakshmi menon
Quick Share

கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் முதலில் 2011ல் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இப்படம் வசூல் ரீதியாக வெற்றியைத் தேடித்தந்தது. அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர். மேலும், தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நமது நடிகை சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

lakshmi menon - updatenewse360

அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் சந்திரமுகி 2வில் முக்கியமான ரோலில் நடித்து இருந்தார். இந்நிலையில், பிக் பாஸ் புகழ் நடிகர் ஆருக்கு மனைவியாக லட்சுமி மேனன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ராஜசேகர பாண்டியன் இயக்கும் அந்த படத்தின் பூஜை இன்று நடந்து இருக்கிறது.

lakshmi menon - updatenews360.png 2
lakshmi menon - updatenews360.png 2
Views: - 224

0

0