மாஸ்டர் வருவதற்கு முன்னரே சாதனை: சூப்பர் வாத்தி!

12 January 2021, 9:54 pm
Quick Share


மாஸ்டர் படம் திரைக்கு வருவதற்கு முன்னதாகவே ஆஸ்திரேலியாவில் புதிய சாதனை படைத்துள்ளத

ஒரு வழியாக மாஸ்டர் படம் நாளை 13 ஆம் தேதி போகி பண்டிகைக்கு வெளியாகிறது. சினிமா பிரபலங்கள் முதல் கோடிக்கணக்கான ரசிகர்கள் வரை உலகம் முழுவதும் அனைவருமே காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், எப்படியாவது விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், சாந்தணு, சஞ்சீவ், நாசர், ரம்யா பாண்டியன், ஆண்ட்ரியா, சாய் தீனா, கௌரி கிஷான் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுவிட்டது. அதோடு, வாத்தி ரெய்டு யூடியூப்பில் சாதனையும் படைத்துவிட்டது. மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சில பாடல்கள் படம் வெளியான பிறகே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதில், விஜய் நடித்த கில்லி படத்தில் வரும் கபடி கபடி பாடலின் ரீமேக்ஸ் பாடல் இடம் பெற்றுள்ளதாம். கபடி கபடி பாடலின் ரீமேக்ஸ் பாடல் படம் வெளியான பிறகே வெளிவர இருக்கிறது. தமிழில் உருவாக்கப்பட்ட மாஸ்டர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. அதோடு, கேரளாவிலும் வெளியாகிறது. தமிழில் 720க்கும் அதிகமான திரையரங்குகளிலும், தெலுங்கில் 710க்கும் அதிகமான திரையரங்குகளிலும், கேரளாவில் 300 திரையரங்குகளிலும், ஹிந்தியில 14 ஆம் தேதி 600 திரையரங்குகளிலும், மற்ற மாநிலங்களில் மாஸ்டர் படம் 320 திரையரங்குகளிலும் வெளியாகிறது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மட்டும் மாஸ்டர் படம் 2650 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. வெளிநாடுகளில் 250க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
உலகம் முழுவதும் வெளியாகும் மாஸ்டர் படம் ஆஸ்திரேலியாவில் எந்தப் படமும் செய்யாத புதிய சாதனையை படைத்துள்ளது. ஆம், முதல் நாளில் மட்டும் 220 காட்சிகள் மாஸ்டர் திரையிடப்படுகின்றன. இதுவரை வேறு எந்தப் படமும் இத்தனை காட்சிகள் ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட்டது இல்லை என்பதால், தளபதி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

ஒரு படம் வெளியாவதற்கு முன்னரே ஆஸ்திரேலியாவில் சாதனை படைத்துள்ளது. எனினும் படம் வெளியான பின்னரும் இன்னும் பல்வேறு சாதனைகளை மாஸ்டர் படம் படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 3

0

0