மருமகனை ஹீரோவாக்கும் மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ?

2 February 2021, 1:20 pm
Quick Share


தனது மருமகனை ஹீரோவாக்க மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த 13 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது. அனிருத் இசையமைத்த இந்தப் படத்தை விஜய்யின் மாமா முறையான சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


சேவியர் பிரிட்டோவின் மகளான சினேகா பிரிட்டோவுக்கும், நடிகர் முரளியின் 2ஆவது மகனும், அதர்வாவின் சகோதரருமான ஆகாஷூக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. இதில், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில், சேவியர் பிரிட்டோ தனது மருமகனான ஆகாஷை ஹீரோவாக்க திட்டமிட்டுள்ளார்.


ஆம், மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தனது எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஆகாஷ் ஹீரோவாக நடிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால், இந்தப் படத்தை இயக்குநர் இயக்குநர், மற்ற நடிகர், நடிகைகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாவது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேவியர் பிரிட்டோ மாஸ்டர் படம் மட்டுமல்லாமல், நீதானே என் பொன்வசந்தம் என்ற டிவி தொடரை தயாரித்துள்ளார். மேலும், செந்தூரப்பாண்டி என்ற படத்திற்கு கிரிடிட் ஸ்கோர் பெற்றுள்ளார். அதோடு, தேவா மற்றும் ரசிகன் ஆகிய படங்களுக்கும் சேவியர் பிரிட்டோவிற்கு கிரிடிட் ஸ்கோர் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் ரூ.250 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடிக்கும் அதிகமாகவே வசூல் கிடைத்துள்ளது. மாஸ்டர் படம் திரையில் வெளியானதைத் தொடர்ந்து ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவிலும் கடந்த 29 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0