தீபாவளி ரேஸில் சிம்பு படத்திற்கு பதிலாக களமிறங்கும் மற்றொரு பிரபல நடிகரின் படம்..!

Author: Udhayakumar Raman
18 October 2021, 7:03 pm
Quick Share

வரும் தீபாவளி அன்று ஏற்கனவே ரஜினி சூர்யா விஷால் சிம்பு ஆகியோரின் படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இன்னும் ஒரு பிரபல நடிகரின் திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருடத்தின் எல்லா நாட்களும் இப்பண்டிகை நாட்களில் நிறைந்த பழங்கள் அதிக வசூலை பெறுவதால் டாப் நடிகர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் பண்டிகை நாட்களில் வெளியிடப்படுகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் தீபாவளியன்று ரஜினியின் அண்ணாத்த சூர்யாவின் ஜெய் பீம், விஷால் மற்றும் ஆர்யாவின் எனிமி திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. சிம்புவின் மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில் அந்த படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்திருந்தது.

தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் எம்ஜிஆர் மகன் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பொன்ராம் இயக்கி இந்த நிலையில் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தேதி தள்ளிக்கொண்டே சென்றது. ஸ்கிரீன்சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக மிருணாளினி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல பாடல்களை பாடகர் அந்தோணிதாசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 307

1

0