தளபதி 68-ல் மைக் மோகனின் சம்பளம்.. இதுவரை வாங்காத தொகை.. கேட்டதும் தூக்கி வாரி போட்டுடுச்சு..!

Author: Vignesh
10 October 2023, 1:15 pm
mike mohan- updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் .

இதில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா, கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாக உள்ளதால். குறிப்பாக சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் போன்று தளபதி 68 அரசியல் பேசும் படமாக அமையலாம் என எதிர்பார்க்கலாம்.

தற்போது வில்லனாக நடிகர் மைக் மோகன் கமிட்டாகியுள்ளார். பல வருடங்கள் கழித்து மைக் மோகனை திரையில் காண அவருடைய ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கும் நிலையில், தளபதி 68 படத்தில் வில்லனாக நடிக்க மைக் மோகன் ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். இதுவரை மைக் மோகன் எந்த படத்திற்கும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 332

0

0