செத்துப்போனா என்னோட பழைய போட்டோஸ் போடாதீங்க ப்ளீஸ்.. மனம் உடைந்து கதறி அழுத மும்தாஜ்..!(Video)

Author: Vignesh
6 April 2024, 5:53 pm
mumthaz
Quick Share

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுவார்கள் அந்த வகையில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் நடிகை மும்தாஜ். இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் தன்னை ஒரு நடிகையாக காட்டிக் கொண்டார் இவருக்கு பட வாய்ப்பும் கிடைத்தது.

மேலும் படிக்க: ICUவில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை- சிகிச்சைக்கு உதவி கேட்கும் குடும்பத்தினர்..!

போகப்போக சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக மாற்றிக் கொண்டார். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகிய மோனிசா என் மோனலிசா என்ற திரைப்படத்தில் மோனிஷா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாபன், குஷி, லூட்டி சொன்னால்தான் காதலா, ஸ்டார், வேதம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

mumthaz

மேலும் படிக்க: சின்ன வயசுலே முன்னாள் காதலி தான் நடுவர்-னு தெரியாமல் பாடிய பிரபல இசையமைப்பாளர்.. Unseen Video..!

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வந்தார் அதிலும் விஜய்யுடன் குஷி திரைப்படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடி என்ற பாடலுக்கு நடனமாடி இளசுகளை ஒரு வழி செய்துவிடுவார். இந்தப்பாடல் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனிடையே, நடிகை மும்தாஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார்.

இந்நிலையில், ஷகிலாவின் பேட்டி ஒன்றின் பங்கேற்ற நடிகை மும்தாஜ் தனக்கு மட்டும் அதிக பணம் கிடைத்தால் தான் நடித்த படங்களின் ரைட்ஸ் ஐ வாங்கிக்கொண்டு இணையதளத்தில் உள்ள மொத்தமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் டெலிட் செய்து விடுவேன். மேலும், நான் இறந்து போனால் என்னுடைய பழைய அசிங்கமான புகைப்படங்களை தயவு செய்து பதிவிட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 126

0

0