வாய்க்குள் மைக் விட்டால் வாந்தி தான் வரும்… கூட்டத்தில் கடுப்பான மைனா நந்தினி!
Author: Rajesh10 பிப்ரவரி 2024, 1:29 மணி
பிரபல சீரியல் நடிகையான மைனா நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். அதையடுத்து நிறைய சீரியல் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க கொஞ்சம் கொஞ்சம் வளர துவங்கினார்.
கூடவே திரைப்படங்கள், ரியாலிட்டி என முகம் காட்டி வந்தார். விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். தமிழில் வெண்ணிலா கபடி குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2017ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் அவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடிகர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2020ஆம் ஆண்டு துருவ் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தொடர்ந்து திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அந்நிகழ்ச்சியில் மைனா நந்தினியின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், அதுவும் அவருக்கு நல்ல விளம்பரமாகவே அமைந்தது.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், அண்மையில் இலங்கையில் ஹரிஹரன் நடத்திய இசை கச்சேரிக்காக சென்றிருந்தார். இந்நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் விமானநிலையத்தில் இருந்து வெளியில் வந்த நந்தினியிடம் பத்திரிக்கையாளர் சூழ்ந்து கொண்டு பேட்டியெடுக்க முந்தியடித்தனர். அப்போது ஒருவர் மைக் கொண்டு வாயில் இடிக்க கடுப்பான மைனா நந்தினி, வாய்க்குள் மைக்கை வெச்சீங்கன்னா வார்த்தை வராது வாந்தி தான் வரும் என்று கூறினார்.
0
0