ஒரு மாசத்துல எத்தனை முறை உடலுறவு பண்றீங்க? கொச்சையான கேள்விக்கு கூச்சத்துடன் பதில் சொன்ன நீலிமா!

Author: Shree
9 September 2023, 8:47 pm
neelima rani
Quick Share

பிரபல சீரியல் நடிகையான நீலிமா ராணி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி அதன் பின்னர் சீரியல், திரைப்படம் என பிசியாக நடித்து வருகிறார். இவர்1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதற்கு பிறகு பல திரைப்படங்களில் முகமறியப்பட்ட ரோல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார். இதுவரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 50க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் கரத்தில் நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார்.

அதன் பின்னர் நிறைய திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வர ” அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும்” போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனிடையே தன்னை விட மூத்த வயதினரான இசைவாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளது. நீலிமா ராணி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவரை ரசிகர்கள் கிண்டல் செய்வது குறித்து கூறி மனம் வருந்தினார்.

Neelima-Rani-updatenews360-1

இந்நிலையில் தற்போது இணையவாசி ஒருவர் நீலிமாவிடம் படுமோசமான முகம் சுளிக்கும் வகையில் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதாவது, உடலுறவில் உங்களுக்கு பிடித்த பொஷிஷன் எது? ஒரு மாதத்தில் எத்தனை முறை செய்வீர்கள்? என மோசமாக கேட்டுள்ளார். இதற்கு சற்று தயக்கத்துடன் ” இதற்கு எப்படி நான் பதில் சொல்லுவது? என கேட்டு பேச்சை மாற்றி உரையாடலை தொடர்ந்தார். இந்த சமாச்சாரம் சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 4356

4

9