‘பாலிவுட் நடிகைக்கு புரபோஸ் பண்ணிய ‘பிரபாஸ் ’… 43 வயதில் காதலில் விழுந்த பிரபாஸ்..!

Author: kavin kumar
29 November 2022, 4:04 pm
prabhas
Quick Share

ஆதிபுருஷ், சலார், ஸ்பிரிட் என பல்வேறு படங்களை கைவசம் வைத்து பிசியான நடிகராக வலம் வரும் பிரபாஸ், பிரபல பாலிவுட் நடிகை மீது காதலில் விழுந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரபாஸ், தற்போது பான் இந்தியா நடிகராக உயர்ந்துவிட்டார். இதற்கு காரணம் அவரின் பாகுபலி படம் தான். அப்படத்திற்கு பின்னர் அவர் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்படுவதோடு, பான் இந்தியா அளவில் வெளியிடப்பட்டும் வருகிறது. 

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ மற்றும் ராதே ஷியாம் ஆகிய இரண்டு படங்களும் படுதோல்வியை சந்தித்தன. இதனால் அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார் பிரபாஸ். அதன்படி இவரின் அடுத்த படமாக ஆதிபுருஷ் ரிலீசாக இருந்தது.

இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட அப்படத்தின் டீசர் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததால், அப்படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணிகளை மீண்டும் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்த படக்குழு படத்தின் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. இதனால் இப்படம் 2024-ம் ஆண்டு தான் ரிலீசாகும் என கூறப்படுகிறது.

ஆதிபுருஷ் பட ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து ஒருபக்கம் செய்திகள் வந்தாலும், மறுபுறம் நடிகர் பிரபாஸின் புதிய காதல் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி நடிகர் பிரபாஸ், ஆதிபுருஷ் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆதிபுருஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தி சனோனிடம் நடிகர் பிரபாஸ் நேரடியாகவே புரபோஸ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கீர்த்தி சனோனும் அவரது காதலை ஏற்றுக்கொண்டதால், இருவரும் பாலிவுட்டில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்களாம். முன்னதாக பாகுபலி படத்தில் நடித்தபோது நடிகர் பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இருவரும் அதனை திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 409

2

0