“இவன் ரொம்ப கேவலமான ஆள்” – உண்மையை போட்டு உடைத்த பிரபு சாலமன் மகள் ஹேசல் சைனி !

5 February 2021, 6:56 pm
Quick Share

மைனா, கும்கி, கயல், தொடரி எனத் தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்துப் பிரபலமானவர் இயக்குநர் பிரபு சாலமன், இவர் இயக்கம் மட்டுமல்லாமல் சாட்டை, ரூபாய் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். இவர் திரைப்படம் மூலம் பிரபலம் என்றால் இவரது மகள் ஹேசல் சைனி டிக்டாக் மூலம் பிரபலம், இவரது புகைப்படங்களுக்கு இங்கு பல இளைஞர்கள் அடிமை.

இவர் தமிழ் சினிமாவில் ரொமான்டிக், குத்து பாடல்கள், வசனங்களை டிக்டாக் செய்து அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் மட்டுமில்லாமல் அவரது புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வந்தது.

கடந்த வருடம் டிக்டாக் நீக்கப்பட்ட காரணத்தினால் தற்போது இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான Meme Page -ஐ பற்றி அவர் வெளிப்படுத்தினார். RANDOM GIRLS மற்றும் நடிகைகளை, பெண் குழந்தை நட்சத்திரங்கள் என அவர்களை மிகவும் மோசமாக சித்தரித்து மீம்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு வந்த நபரின் id-யை வெளிப்படுத்தி அவர் “இவன் ஒரு கேவலமான ஆள்.

எல்லா விதமான பெண்களையும் மோசமாக சித்தரித்து அவன் தொடர்ந்து பதிவிட்டு வருகிறான். அனைவரும் அவனது இந்த பேஜ்ஜை ரிப்போர்ட் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். இதை தைரியமாக வெளிப்படுத்திய ஹேசல் ஷைனியை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.

Views: - 31

0

0