ப்ரித்விராஜின் `ஜன கன மன’ டிரெய்லர் வெளியீடு..!

Author: Rajesh
31 March 2022, 4:26 pm

ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் ப்ரித்விராஜ் – சுராஜ் நடித்திருக்கும் மலையாளப்படம் ஜன கன மன. ப்ரித்விராஜ் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ஹிட்டாகி வரும் நிலையில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதலில் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்பட்ட இந்தப் படம் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பகத் சிங்கின் வரியை கோடிட்டு காட்டியது உள்ளிட்ட காட்சிகளுடன் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற்று வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஜனகனமன திரைப்படத்தின் டிரெய்லரால், இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  • sachin's daughter went on a date with a Bollywood actor கில் உடன் மனக்கசப்பு… பாலிவுட் நடிகர் பக்கம் சாய்ந்த சச்சின் மகள்..!