இந்த ஜென்மத்துல அவர் கூட பண்ண சொன்னா.. குண்டை தூக்கி போட்ட பிரியா பவானி சங்கர்..!

Author: Vignesh
6 March 2024, 5:24 pm
priya bhavani shankar
Quick Share

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.

பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் , பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

priya bhavani shankar - updatenewse360

அண்மையில் கடற்கரையோரம் புதிய வீடு வாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்தார். தொடர்ந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பவானி சங்கரிடம் கேள்வி கேட்கும் போது, நீங்கள் சினிமாவில் நடிக்கும் போது படத்தில் இடம்பெறும் காட்சிக்காக லிப்லாக் கொடுக்க யாருக்கு சம்மதிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், சற்று வெட்கப்பட்டு சிரித்தபடி எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அல்லு அர்ஜுனா முத்தக்காட்சி தேவைப்பட்டால் அவருடன் அந்த காட்சிகளில் நடிப்பேன் என்று வெளிப்படையாக பேசி உள்ளார். அதாவது, நடிகர் அல்லு அர்ஜுன் என்றால், அவர்கள் லிப் லாக் பண்ண சொன்னால் ஓகே சொல்லிடுவேன் என்று இந்த நேர்காணலில் பிரியா பவானி சங்கர் ஓபன் ஆக தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

Views: - 79

0

0