அந்த மாதிரி பையன் புருஷனா வேணும்…. வெட்கத்தை விட்டு கூறிய பிரபல நடிகை!

Author: Shree
25 May 2023, 8:39 am
priya bhavani shankar
Quick Share

சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார்.

ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. அதையடுத்து அண்மையில் ராகவா லாரன்சுடன் நடித்த ருத்திரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை வரவேற்பை பெற்று வருகிறது.

priya bhavani shankar - updatenewse360

கோலிவுட் சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் பிரியா பவானி ஷங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ” உங்களுக்கு எந்த மாதிரி கணவர் அமையவேண்டும் என்ற கேள்விக்கு”… மிகவும் மரியாதையா நடந்துக்கொள்ளும் நபரை பிடிக்கும். ஒருத்தரின் வசதியை பார்த்தோ பணத்தை பார்த்தோ மரியாதையை கொடுக்காமல் சக மனிதனை மனிதனாக மதிக்கும் குணம் கொண்ட பையனை பிடிக்கும். அந்த நபர் அப்பா காசுல வாழும் நபராக இருக்கக்கூடாது சொந்த உழைப்பில் லட்சியத்தோடு வாழ்பவராக இருக்கவேண்டும் என கூறினார்.

Views: - 1170

19

9