தமிழர்களை இழுவுபடுத்துகிறதா புஷ்பா படம்..? சினிமாத்துறையினர் நசுக்கப்படுகின்றனரா..?
Author: Mari8 January 2022, 12:24 pm
சமீப காலமாக, தமிழ் சினிமாவில் வெளியாகும் சில திரைப்படங்களை தடைசெய்யக் கோரிய, சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கி வரும் நிகழ்வு வாடிக்கையாகி உள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை, எந்த ஒரு திரைப்படமும் வெளியாவதற்கு முன்பாக, தணிக்கை குழுவினர், படத்தை முழுவதும் பார்ப்பார்கள், அந்த படங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதேனும் அமைக்கப்பட்டிருந்தால், அதை நீக்கச் சொல்லுவார்கள். இப்படி தணிக்கை குழுவினர் உறுதி செய்த பின்னரே படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்.
இதனிடையே, சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில், இடம் பெற்றிருந்த காலண்டரை நீக்கச் சொல்லி சில அமைப்புகள் விடுத்த கோரிக்கையை அடுத்து, அந்த காட்சி நீக்கப்பட்டது.
இதை போல், சிம்புவின் மாநாடு படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல சித்தரிப்பதால், அந்தப்படத்தை தடைசெய்ய வேண்டும் என கூறி வந்தனர். இதுபோல், தங்கள் சாதியை பற்றி படத்தில் தவறவாக குறிப்பிடப்பட்டுள்ளதால், படத்தை தடை செய்ய வேண்டும், எங்கள் தொழிலை இழிவுபடுத்துகிறது இந்த படம் இருக்கிறது. அதனால் படத்தை தடைச் செய்ய வேண்டும், இப்படி தமிழகத்தில், பல படங்களை தடைசெய்ய வேண்டும் என கோரிக்கைகள், இன்று நேற்று அல்ல பல வருடங்களகவே போராட்ட நிகழ்வுகளும், ஏன். திரையரங்குகளுக்குள்ளயே அடிதடி, சண்டைகள் நடந்த சம்பவங்கள் கூட நடந்தேறியுள்ளன.
தணிக்கை குழு உறுதி செய்த பின்னரே படங்கள் வெளிவரும் இந்த சூழ்நிலையில், இது போன்ற கசப்பான சம்பவங்கள் தயாரிப்பாளர்களை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களை வருத்தமடைச் செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது, தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பி; சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றுள்ளது.
செம்மரக் கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் தொடக்க காட்சியில் தமிழ்நாடு காவல்துறை பற்றியும், தமிழக மக்களை இழிவுப்படுத்து போன்ற வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி அமைப்பு புகார் அளித்துள்ளனர்.இந்தப் படத்தில் உள்ள குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தை சரியாக ஆய்வு செய்யாமல் தணிக்கை அளித்த தமிழ்நாடு தணிக்கை திரைப்பட குழு உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
1