“நீ யாருடா வெண்ண சொல்றதுக்கு” Blue sattai மாறனை கிழித்து தொங்க விட்ட பிரபல நடிகர்..!

Author: Rajesh
13 March 2022, 1:08 pm
blue sattai-updatenews360
Quick Share

ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போதும்,’ப்ளூ சட்டை’ மாறனின் விமர்சனத்தை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். அதேசமயம், படம் எடுக்கும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் குறித்து தனது பாணியில் அதிரடியாக ‘ப்ளூ சட்டை’ மாறன் சொல்லும் விமர்சனம் சினிமா துறையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தும்.

குறைசொல்வது சுலபம், ஆனால் படம் பண்ணுவது கடினம் என்று இவரது விமர்சனத்தை சுட்டிக்காட்டும் விமர்சகர்களுக்கு சவால் விடும் படமாக
‘ப்ளூ சட்டை’ மாறனின் ஆன்டி இந்தியன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

இருப்பினும், பாரதிராஜா உள்பட பல மூத்த இயக்குனர்கள் ஆன்டி இந்தியன் படம் பார்த்து ‘நீ சாதிச்சுட்டடா… எங்களை விமர்சிக்க உனக்கு தகுதி இருக்குடா’ என்று புகழ்ந்திருந்தனர். இதை ஆயுதமாக எடுத்து கொண்ட ‘ப்ளூ சட்டை’தங்போது நடிகர்களை விமர்ச்சிப்பதில் எல்லை மீறி வருகிறார்.

சமீபத்தில், வெளிவந்த வலிமை திரைப்படம் திரையங்குகளில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. அதில், அஜித் முகத்தில் தொப்பை விழுந்திருக்கிறது, டான்ஸ் ஆடுவது மாவு பிசைவது போல இருக்கிறது என்றெல்லாம் ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் ட்ரோல் செய்து இருந்தார். அஜித்தை இப்படி பேசியதற்கு பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் படம் நிகழ்ச்சி மேடையில் மேடையில் Blue Sattai மாறனை விமர்சித்துள்ளார். அவர் பேசியதாவது, சினிமா சினிமா காரங்களே கொல்லாதீங்க. எவ்வளவோ பேர் அழகா படம் ரிவியூ பண்றாங்க என்றார். மேலும், தொடர்ந்து சினிமாவை கிண்டலாக விமர்சனம் செய்து வரும் Blue Sattai மாறனை விமர்சனம் செய்யும் வகையில், ஒரு மனசனோட உடல பத்தியோ கலர பத்தியோ விமர்சிக்க இங்க எவனுக்கு துப்பு இல்ல என்றார். தொடர்ந்து பேசிய அவர், நீ யாருடா வெண்ண சொல்றதுக்கு என்று கடுமையான வார்த்தையால் திட்டியுள்ளார்.

Views: - 1079

20

4