பழைய அரசு பள்ளியை புதுப்பிக்க உதவிய ஆஸ்திரேலிய ரஜினி மக்கள் மன்றம்

7 November 2020, 7:45 pm
Quick Share

94 ஆண்டுகள் பழமையான மதுரை அரசு பள்ளியினை ஸ்மார்ட் கிளாஸ் மூலம் புதுமை ஆகி ஆஸ்திரேலியாவின் ரஜினி மக்கள் மன்றத்தின் அசத்தியுள்ளனர். மதுரையை சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் ரஜினி மக்கள் மன்றம் மூலம் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

ஆஸ்திரேலியா ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் குரூப்பில் இருக்கும் சாம்சங் தேவராஜ் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் மதுரை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள அரசுப் பள்ளியை சீரமைக்க முடிவு செய்தார்.

அதன்படி மதுரை மாவட்டத்தின் கிழக்குப் பகுதி ஒரு கிராமத்தில் 1926 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அரசு பாடசாலை தற்போது மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என்ற பெயரில் அதே பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் புதுப்பிக்க முடிவு செய்த ஆஸ்திரேலிய ரஜினி மக்கள் மன்றத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்து அதற்கான பணியில் இறங்கி பள்ளிக் கட்டடத்தின் பழைமை மாறாமல் மூன்று லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் புதுப்பிக்கும் பணிகள் நிறைவுபெற்று மதுரை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மூலமாக பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட இப்பணியைத் தொடர்ந்து டிவி மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட மாற்றத்துக்கு தேவையான அனைத்து பொருட்களும் பள்ளி திறந்ததும் வழங்க முடிவு மன்றத்தால் செய்யப்பட்டுள்ளது. இதேபோல ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் கடைக்கோடியில் உள்ள பராமரிக்கப்படாத பள்ளிகளை புதுப்பிக்கவும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Views: - 18

0

0