YouTube பிரபலத்தை அடித்து நொறுக்கிய விஷால்.. பிரமோஷனுக்காக இப்படியெல்லாமா பண்றது..!(video)

Author: Vignesh
15 April 2024, 6:16 pm
vishal - updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார். ஆக்‌ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.

vishal

அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது. பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.

vishal - updatenews360

மேலும் படிக்க: அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. மனம் திறந்து பேசிய மௌனிகா..!

பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. 45 வயதை எட்டியும், இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் விஷால். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க: இனி செட் ஆகாது.. Vijay TVக்கு குட்-பை சொல்லிட்டு புதிய தொழில் தொடங்கிய அறந்தாங்கி நிஷா..!

இந்நிலையில், அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்கிவரும் நடிகர் விஷால் தற்போது, ஹரி இயக்கத்தில் ரத்தினம் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், விஷால் எப்போதும் சாப்பிடும் போது பல மதத்தின் கடவுள்களை கும்பிட்டு விட்டு அதன் பிறகு தான் சாப்பிட தொடங்குவார்.

அதைப் பார்த்துவிட்டு நடிகர் யோகி பாபு கொடுத்த ரியாக்சன் வீடியோவும் இணையதளத்தில் சில மாதங்களுக்கு முன்பு வைரலானது. நெட்டிசன்களும் அந்த வீடியோவை பங்கமாக கலாய்த்து வந்தனர். இந்நிலையில், விஷால் தற்போது ட்ரொல்களுக்கு பதில் அளித்து இருந்தார். அதாவது, ரத்தினம் பட விழாவில் பேசிய அவர் செய்தியாளர்கள் அது குறித்து கேட்கையில், இதை நான் பல வருடங்களாக செய்து வருகிறேன். எந்தவித அரசியலுக்காகவும் இதை செய்யவில்லை என்னை ட்ரொல் செய்யவர்கள் பற்றி எனக்கு வருத்தமும் இல்லை, அதற்காக விளக்கம் கொடுக்கவும் எனக்கு அவசியமில்லை என்று தெரிவித்து இருந்தார்.

vishal

இந்நிலையில், யூடியூப் பிரபலமான சதீஷ் தங்கள் எடுக்கும் வீடியோவிற்கு இப்போதாவது விஷால் அண்ணா கமெண்ட் பண்றாரானு பார்ப்போம் என்று தீபாவிடம் கூற உடனே பக்கத்தில் விஷால் உட்கார்ந்து இருக்கிறார். அப்போது, விஷால் ஆபீஸ் ரூம் போய் பேசலாம் என்று சதீஷை கூட்டி சென்று அடித்து விளாசி இருப்பார். காமெடிக்காக எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பிரமோஷனுக்காக இப்படியெல்லாமா பண்றது என்று விஷாலை கலாய்த்து வருகிறார்கள்.

Views: - 97

0

0