ஆளுங்கட்சி MLAவுடன் இரண்டாம் திருமணம்?.. வெளிப்படையாக பேசிய ரேகா நாயர்..!

Author: Vignesh
23 May 2024, 10:39 am
Rekha-Nair-updatenews360
Quick Share

பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

மேலும் படிக்க: போட்டி போட்டு அஜித் படத்தின்- OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய நிறுவனம்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க..!

இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.

மேலும் படிக்க: எனக்கு நம்பிக்கை இல்லை.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு VJ விஷால் திடீர் பதிவு..!

அவ்வப்போது ஏதேனும், சர்ச்சையாக பேசி பெரும் விமர்சனத்திற்கு ஆளாகுவார். அந்தவகையில், ரேகா நாயருக்கு திருமணம் ஆன ஆளுங்கட்சி எம்எல்ஏ உடன் கல்யாணம் நடப்பதாக இணையதளத்தில் ஒரு தகவல் வலம் வந்தது. இதுகுறித்து, ரேகா நாயர் கூறுகையில், ஆமாம் எம்எல்ஏ அப்பா எனக்கு பழக்கமானவர். ஒன்றாக மாரத்தான் எல்லாம் ஓடுவோம். ஒரே ஏரியாவில் இருப்பதால் அவருடைய குடும்பத்தினர் அனைவருமே எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். அதோடு, தனக்கு பல எம்எல்ஏக்கள் அமைச்சர்களை தெரியும் என்றும், வதந்திகளில் வெளியாகும் எம்எல்ஏ உடன் திருமணமா என்ற கேள்விக்கான பதிலை அவரிடமே போய் கேளுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Views: - 109

0

0