என்ன ஆச்சு இவங்களுக்கு? அந்த மாதிரி போட்டோ வெளியிட்டு அதிர வைத்த ரம்யா நம்பீசன்!

Author: Shree
22 November 2023, 6:28 pm

ரம்யா நம்பீசன் மலையாள திரைப்பட நடிகை ஆவார் . இவர் தமிழில் ராமன் தேடிய சீதை, குள்ளநரிக் கூட்டம் ,பீட்சா ஆகிய படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். இவர் ஒரு பாடகரும் கூட பாண்டியநாடு படத்தில் இவர் பாடிய “Fy Fy கலாச்சிஃபை பாடல் ” மக்கள் மத்தியில் நல்ல ஹிட் அடித்தது.

நடிகை ரம்யா நம்பீசன் விஜய்சேதுபதியுடன் ‘பீட்சா’ ,’ சேதுபதி’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.சேதுபதி படத்திற்கு பிறகு பல முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தும் , அம்மா கேரக்டராகவே வந்ததால் , அந்த படங்களில் நடிப்பதை நிராகரித்து விட்டார் ரம்யா நம்பீசன் .

தமிழில் கவின் நடிப்பில் வெளியான “நட்புன்னா என்னான்னு தெரியுமா” படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்தார் ரம்யா நம்பீசன். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்து வரும் ரம்யா நம்பீசன் திடீரென உடல் பருமனாகி அவரா இவர்? என ரசிகர்கள் அதிர்ச்சியாகும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை திசை திரும்பியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?