குணா படம் பிளாப் ஆக காரணம் ரஜினி.. உண்மையை ஓப்பனா ஒத்துக்கொண்ட பிரபலம்..!

Author: Vignesh
4 March 2024, 7:36 pm
rajini kamal- updatenews360
Quick Share

உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டடு வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றது. ரூ. 400 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் கமல், உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். தினமும் தவறாது உடற்பயிற்சி மேற்கொள்ளும் கமல் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருவது வழக்கமாக உள்ளது.

indian 2 kamal hassan

இந்நிலையில், சந்தான பாரதி இயக்கத்தில் கமலஹாசன் ரேகா புதுமுக நடிகை ரோஷினி என பலர் நடிக்க 1991 ஆம் ஆண்டு வெளியான படம் குணா. இந்த படத்தில், மிகவும் ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால், அது ஒரு குகையில் எடுக்கப்பட்ட படம். அதில், ஒரு ஸ்பெஷல் பாடலும் வரும். அந்த பாடல் வெளியாகி பல வருடங்கள் ஆன நிலையில், தற்போது குணா படம் பற்றி பலரும் பேசுகிறார்கள். காரணம் இன்னொரு படம் தான். அதாவது, மலையாளத்தில் தயாரான மஞ்சுமெல் பாய்ஸ் என்ற படத்தில் குணா படத்தில் வந்த குகையை செட் போட்டு படம் எடுத்துள்ளனர்.

manjummel boys

இதனால், மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் குணா படம் குறித்து சமீப நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், குணா படத்தை எடுத்த சந்தான பாரதி பேட்டி ஒன்றில் பேசுகையில், மஞ்சுமெல் பாய்ஸ் படம் பார்த்தேன் அற்புதமாக எடுத்திருக்கிறார்கள். குணா குகையை அவ்வளவு அற்புதமாக எப்படி செட் போட்டார்கள் என தெரியவில்லை.

guna

ஒரு குகை வேண்டும் எனக் கேட்டபோது, அங்கிருந்த ஒரு கைடு எங்களை அழைத்து சென்றார். அப்படி போய் பார்த்தது தான் அந்த குணா குகை இந்த இடத்தில் நிறைய குழிகள் இருக்கும் அதில் விழுந்தால் நேராக கீழே போய் விட வேண்டியதுதான் அதனால் ஜாக்கிரதையாக இருங்கள் என அந்த கைடு எங்களுக்கு எச்சரிக்கை கொடுத்தார்.

guna

ஆனால், எங்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. மூன்று குகைகள் அதில் மூன்றாவது குகைக்கு செல்வது கஷ்டமாக இருந்தது. மூன்று பேர் முதலில் போய் பார்த்தபோது, ஒவ்வொருவராக கைகளைப் பிடித்துக் கொண்டு போனோம். ஒரு யூனிட்டே போக வேண்டும் என்று வனத்துறையினரிடம் பேசினோம். கயிறு மூலம் தான் மூன்றாவது குகைக்கு சென்றோம். டிபன் சாப்பிட்டுவிட்டு காலை 7 மணிக்கு கீழே சென்றால், மாலை 5 மணிக்கு தான் மேலே வருவோம். சாப்பாடு எல்லாம் கிடையாது.

manjummel boys

இந்நிலையில், 34 ஆண்டுகள் கழித்து மஞ்சுமெல் பாய்ஸ் படம் முலமாக மீண்டும் குணா படம் பேசப்படுகிறது என்பது பெருமையாக இருக்கிறது. குணா படமும் தளபதி படமும் ஒன்றாக வெளியே வந்தது. ஆனால், குணா படம் மக்களுக்கு புரியவில்லை என்பதால், எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனால், இன்று குணா படம் பேசப்படுகிறது என்றால் அப்போது நல்ல படம் தானே என்று தெரிவித்துள்ளார்.

Views: - 87

0

0