பாலிவுட்டில் அஜித் படங்களுக்கு செம்ம Demand – தயாரிப்பாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் !
2 December 2020, 10:30 amஅஜித் தமிழ் சினிமாவின் மிக பெரிய உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் சிவா இயக்கத்தில் இதுவரை வந்த படங்களில் வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்கள் எல்லாம் மெகா ஹிட் அடித்தது.
இவர் 17 வருடங்களுக்கு முன்பு, அசோகா என்னும் படத்தில் ஷாருக்கானுடன் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் என்னும் ஹிந்தி படத்தின் தமிழ் பதிப்பில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.
திடீரென்று பாலிவுட்டில் அஜித்துக்கான ரசிகர் பட்டாளம் உருவாகத் தொடங்கியது. இதனால் அவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப் பக்கங்களில் வெளியிடப்பட்டன.
இந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் சில பாலிவுட் தயாரிப்பாளர்கள் இவரின் பழைய படங்களை டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி அஜித்தின் பில்லா, வீரம், வேதாளம், என்னை அறிந்தால் போன்ற திரைப்படங்கள் இந்தியில் டப் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
0
0