தெறிக்கவிடும் “ஜவான்”ஆடியோ லான்ச் – ஷாருக்கானை வரவேற்க திரண்ட லட்சக்கணக்கான ரசிகர்கள்!

Author: Shree
30 August 2023, 4:55 pm
shah rukh khan jawan
Quick Share

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இன்று சற்றுமுன் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில், ‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடந்து வருகிறது. படக்குழுவினர், கல்லூரி மாணவர்கள், ரசிகர் மன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினர் உள்ளிட்ட லட்ச கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இவ்விழாவில் ஷாருக்கான் உடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷாருக்கானை வரவேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு அவரது காரை சூழ்ந்துக்கொண்டு பாலிவுட் கிங் காங் என கோஷமிட்டு வரவேற்றனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.

Views: - 264

0

0