“மீரா மிதுன் என் மேல Acid அடிச்சுடுவேன்னு மிரட்டுறா…” போலீஸ் புகார் கொடுத்த ஷாலு ஷம்மு…!

14 August 2020, 2:30 pm
shalu shammu updatenews360
Quick Share

“நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. சூர்யா கல்வி போன்ற நல்விஷயங்களை செய்து வருகிறார்.

சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மற்றவரை தூற்றி பழித்து அதில் கோட்டை கட்டாதீர்கள். அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்” என்று பாரதிராஜா அறிக்கை விட்டு இருந்தார்.

மேலும், இளம் நடிகை ஷாலு ஷம்மு தானே இந்த விவாகரதிற்குள் வந்து மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கிறார். அந்த வகையில் மீரா மிதுன் காருக்குள் அமர்ந்து கொண்டு புகை பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார்.

தற்போது மீரா மிதுன் அடியாட்களை கொண்டு நடிகை ஷாலு ஷம்முவை Phone இல் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மேலும் ” மீராவை பற்றி எந்த ஒரு கருத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட கூடாது எனவும், மீறினால் முகத்தில் Acid அடித்துவிடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும், ஆட்களை விட்டு மீரா மிதுன் மிரட்டுகிறார்” என்று போலீஸிடம் புகார் அளித்துள்ளார்.

Views: - 58

0

0