வாழ்க்கையே மாற்றிய குடிபோதை… 5 வருடம் வாய்ப்பில்லாமல் கிடந்த ஸ்ரீ திவ்யாவின் இன்ஸ்டா பதிவு வைரல்!

Author: Shree
26 August 2023, 8:45 am

தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் குழந்தை நட்சத்திரமாக மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.

தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஸ்ரீ திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் பிளாப் ஆனதால் பிறகு 2012 இல் மாருதி இயக்கிய “பஸ் ஸ்டாப்” படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்த இப்படமானது, வெற்றி அடைந்தது.

அதன் பின்னர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். முதல் படத்திலே அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு இளைஞர்களின் பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்தார்.

பிறகு பென்சில் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார்.மேலும் ஈட்டி, காக்கி சட்டை மற்றும் வெள்ளைக்கார துரை படங்களிலும் நடித்துள்ளார். நல்ல பீக்கில் இருந்தபோது அம்மணி சினிமா வாழ்க்கையை தானே அழித்துக்கொண்டார்.

Sri Divya-updatenews360

ஆம், கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இமான் அண்ணாச்சி கிரகபிரவேசதில் ஓவராக மது அருந்திவிட்டு தலைகால் புரியாமல் மதுபோதையில் முகம் சுளிக்கப்படி மோசமாக ஆட்டம் போட்டுள்ளார். அங்கிருந்த பலர் எடுத்து கூறியும் கேட்காத ஸ்ரீ திவ்யாவின் போதை தெளியவைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த செய்திது காட்டுத்தீயாக பரவி கோலிவுட் சினிமா ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இதனால் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவரும் சில ஆண்டுகள் வாய்ப்பு தேடி அலைத்துள்ளார். பின்னர் போட்டோ ஷூட் நடத்தியும் பார்த்தார் ஆனால் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை.

இதனால் சொந்த கிராமத்திற்கு பொட்டி படுக்கையுடன் சென்று ஆடு , மாடு, கோழி என சிம்பிளான கிராமத்து வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பறவைகளை பாதுக்காக்கும் பணியும் மீன்வளத்தை நிறுவும் HMDA இன் திட்டம் குறித்தும் சமூக அக்கறை சார்ந்து ஈடுபட்டு அதுகுறித்து பதிவுகள் இட்டுள்ளார். படவாய்ப்புகள் இல்லையென்றாலும் சரியான பாதையை தேர்ந்தெடுத்து சென்றுள்ள ஸ்ரீ திவ்யாவுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!