சம்பளமே இல்லாம கூட நடிப்பேன்.. ஆனா, சிவகார்த்திகேயன் கூட முடியாது.. கறார் காட்டிய வாரிசு நடிகை..!

Author: Vignesh
11 June 2024, 3:45 pm
sivakarthikeyan
Quick Share

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

sivakarthikeyan

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

sivakarthikeyan-updatenews360

தற்போது, சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து இந்த பொங்கலுக்கு தான் ரிலீனது.

மேலும் படிக்க: புதிய தொழிலில் கல்லா கட்டும் பிரியங்கா நல்காரி.. ஆரம்பத்திலே ஓஹோன்னு கொட்டும் வருமானம்..!

இந்நிலையில், ஸ்ருதிஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் முதலில் கமிட்டாகியது ஸ்ருதிஹாசனம். சூட்டிங் எல்லாம் ரெடியான சமயத்தில் திடீரென்று யார் என்ன சொன்னார்களோ தெரியவில்லை சிவகார்த்திகேயன் எல்லாம் சின்ன ஹீரோ அவருடைய எப்படி நான் நடிக்கிறது என்று ஸ்ருதிஹாசன் பின்வாங்கி விட்டாராம். அதற்கு காரணம் வேறு ஒன்றும் அந்த சமயத்தில் கூறப்பட்டது.

shruti haasan - updatenews360

மேலும் படிக்க: 34 வருட சினிமா வாழ்க்கை.. 58 வயது நடிப்பு அரக்கன் விக்ரமின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவுதானாம்..!

ஒரு முறை கமலஹாசன் பற்றி சிவகார்த்திகேயன் தவறாக பேசியதால் அவரை கமல் ரசிகர்கள் அடித்த விவகாரம் தான் காரணம் என்றும், கூறப்பட்டது. மேலும், அந்த சமயத்தில், சம்பளமே இல்லாம கூட நடிப்பேன் சிவா கூட முடியாது என்றும் கூறினாராம். அதேபோல், நடிகர் கார்த்தியின் தோழா படத்தில் நடிகை தமன்னா ரோலில் முதலில் நடிக்க இருந்து கமிட் ஆகி பத்து நாள் ஷூட்டிங் சென்று இருக்கிறார் ஸ்ருதிஹாசன். இடையில், ஒரு ஈகோ பிரச்சனை ஏற்பட்டு சுருதிஹாசன் அந்த படத்தில் இருந்து விலகி பின்னர் தமன்னாவை கமிட் செய்திருக்கிறார்கள்.

Views: - 86

0

0

Leave a Reply