சிக்ஸ் பேக் வச்ச சிவகார்த்திகேயன்…. மிரட்டும் தோற்றத்தில் வைரலாகும் போட்டோ!
Author: Shree12 August 2023, 1:40 pm
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். எந்த ஒரு பின்புலனும் இல்லாமல், டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
நடிப்பையும் தாண்டி தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றி பயணத்தை துவக்கியுள்ளார். மேலும் பாடலாசிரியாகராகவும் வலம் வருகிறார். இப்படி தன் திறமையை வெளிப்படுத்தி பன்முக திறமை மூலம் வெற்றி கொடி நாட்டி வருகிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்திற்கு அடுத்து தன்னுடைய 21 படத்திற்காக வெறித்தனமாக உடலை மெருகேற்றி வருகிறார். ஜிம்மில் சிக்ஸ் பேக் வைத்து மிரட்டலாக ஒர்கவுட் செய்யும் போட்டோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இந்த போட்டோவில் சிவகார்த்திகேயனின் தோற்றம் மிரட்டலாக இருப்பதாக எல்லோரும் கூறி வருகிறார்கள்.
1
0