மாஸ்டர் நாளைக்கு ரிலீஸ்: இன்னிக்கு போய் விஜய்யை சந்தித்து பேசிய நடிகர் ஸ்ரீமன்!

12 January 2021, 6:21 pm
Quick Share


விஜய் நடித்த மாஸ்டர் படம் நாளைக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், நடிகர் ஸ்ரீமன் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். கார்த்தியின் கைதி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சஞ்சீவ், அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், சாந்தணு, நாசர், ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாளை 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் வெளியாகும் மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும், 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு, ஒரு வாரம் வரையில் திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைதி படத்தை போன்று போதைப்பொருளை மையப்படுத்திய மாஸ்டர் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கைதி படத்தில் இடம்பெற்ற அனைத்து சாரம்சங்களும் இந்தப் படத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் ஸ்ரீமன், தளபதி விஜய்யை அவரது அலுவலத்திற்கு சென்று சந்தித்து பேசியுள்ளார்.
நாளை மாஸ்டர் படம் திரைக்கு வரும் நிலையில், இன்று விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். ஒருவேலை தளபதி65 படத்தில் விஜய் உடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டாரோ என்னவோ என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க தற்போது மாஸ்டர் படத்தின் 8ஆவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், விஜய் கபடி விளையாடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. உள்ள வந்து தப்பு செஞ்சா வாத்தி ரெய்டு வரும்…வந்துச்சா? சொன்னோமா? ஒரு தரமான புரோமோ காத்திருக்குனு சொன்னோமா? என்று கூறி தயாரிப்பு நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0