ரஜினி, விஜய் ரசிகர்கள் போய் அங்குட்டு விளையாடுங்க பா..! இவரு தான் Only One சூப்பர் One – தன் பங்கிற்கு கலாய்த்த ப்ளூ சட்டை..!

Author: Vignesh
7 January 2023, 1:00 pm

சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 160க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் அவரது 169வது படமாக இயக்குனர் ஜெயிலர் படம் ஷூட்டிங் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது.

RAjini kanth -Updatenews360

இந்நிலையில் ரஜினிகாந்திற்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற போட்டி விஜய், அஜித் ரசிகர்களிடையே பொரும் அக்கப்போரே நடைப்பெற்று வருகிறது. அப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று வாரிசு ஆடியோ லான்சில் பல பிரபலங்கள் புகழ்ந்தும் வந்துள்ளனர்.

Vijay - Updatenews360

இதனை விஜய் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். இப்படியொரு நிலையில் ரஜினியும் இல்ல விஜய்யும் இல்ல என்று கூறும் வகையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் ஒரு பேனாரை வெளியிட்டு பரபரப்பை பெரும் ஏற்படுத்தியுள்ளனர்.

rolex-surya-updatenews360

நம்பர் 1, நம்பர் 2 எல்லாம் பாப்பா விளையாட்டு ஐ ஆம் தி ஒன்லி ஒன் சூப்பர் ஒன் என்ற வார்த்தையில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் போஸ்டரை ஒட்டியுள்ளனர். இதனை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அவரது டிவிட்டர் பக்கத்தில் ஓஹோ.. அப்படியா விசயம் என்று கூறி தன் பங்குக்கு கலாய்த்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!