“கங்குவா” படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் ஆர்வத்தை எகிறவைத்த சூர்யாவின் Review!

Author: Rajesh
19 February 2024, 9:05 pm
Quick Share

பிரபல நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகனான சூர்யா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்பித்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட், துணை ஹீரோ போன்ற திரைக்கதைகளில் நடிக்கத் தொடங்கிய இவர், நந்தா, காக்க காக்க, பிதாமகன், மௌனம் பேசியதே போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

விஜய், அஜித் இணையாக போட்டியாக வலம் வரும் சூர்யா, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், மாற்றான் போன்ற திரைப்படங்கள் மூலம் செம பிரபலம் அடைந்தார். குறிப்பிட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் நடித்து வெளியான ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்கள் இவரை இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

செலக்ட்டீவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யா தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். கற்பனை கதைக்கொண்ட வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தில் திஷா பட்டாணி, யோகி பாபு, நடராஜன், ரெடின், கோவை சரளா, ரவிக்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.

suriya-kanguva-1-updatenews360

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படமானது வருகிற ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் கங்குவா படத்தின் முழு அவுட்டையும் பார்த்து சூர்யா கொடுத்த விமர்சனம் தான் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது. அதாவது, கங்குவா படத்தை பார்த்து சூர்யா மிகுந்த திருப்தி அடைந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் சூர்யா ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

Views: - 233

0

0