“என் உள்ளாடையை கடவுள் அளவிடுகிறார்.” என சர்ச்சை பேச்சு.. அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..!

Author: Rajesh
29 January 2022, 12:22 pm
Quick Share

கடந்த 2011-ம் ஆண்டு இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ஸ்வேதா திவாரி. இந்நிகழ்ச்சியில் இவர் முதலிடம் பிடித்து பிக்பாஸ் டைட்டிலையும் ஜெயித்தார். இந்நிகழ்ச்சி மூலம் இவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. தொடர்ந்து, படங்களில் மட்டுமல்லாது வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில்இவரது நடிப்பில் உருவாகியுள்ள, ‘ஷோ ஸ்டாப்பர்’ என்கிற வெப் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சி போபாலில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஸ்வேதா திவாரி ‘கடவுள் எனது உள்ளாடையை அளவு எடுத்து கொண்டிருக்கிறார்’ என கூறினார். நடிகையின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, விசாணை நடத்த போபால் காவல் ஆணையருக்கு மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகை ஸ்வேதா அறிக்கை மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார். தன்னுடைய கருத்து மத உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் பேசப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள என்போன்ற ஒருத்தி இதுபோன்ற கருத்துக்களை வேண்டுமென்றே கூறுவது என்பது நடக்காத ஒன்று. தன்னுடைய செயல்பாடுகளோ வார்த்தைகளோ யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதுகுறித்து தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Views: - 1624

0

0