பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பாடலில் ‘அஜித் ‘ , வலிமைக்கு வலிமை சேர்க்கும் தளபதி விஜய்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!

Author: kavin kumar
8 February 2022, 2:26 pm
Arabic Kuthu
Quick Share

டாக்டர் படம் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயுடன் கைகோர்த்துள்ள இயக்குனர் நெல்சன் திலீப்குமார் . விஜயை வைத்து ” Beast ” படத்தை இயக்கியுள்ளார் . விஜய்யின் பீஸ்ட் படம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

பீஸ்ட் படத்திற்கான படப்பிடிப்புகள் டெல்லி, சென்னை,ஜார்ஜியா என மாறி மாறி நடக்கிறது. சென்னையில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்ட புகைப்படம் ஒன்று லீக் ஆனது காமெடி நடிகர் ரெடின்கிங்ஸ்லி கூட டாக்டர் படம் வெற்றி விழாவில் பீஸ்ட் படத்தில் போடப்பட்ட செட் பற்றி உளறிவிட்டு ரசிகர்களின் சுவாரஸ்யத்தை துடிவிட்டார்.

நீண்ட நாட்களாக பீஸ்ட் பட அப்டேட் கிடைக்காத விஜய் ரசிகர்கள் அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் பட அப்டேட் கேட்டு ட்ரெண்ட் செய்வர் அந்தவகையில் நேற்று விஜய் ரசிகர்களுக்கு ஓர் சந்தோஷமான செய்தி வந்தது. படத்தில் இடம்பெறும் “அரபி குத்து” பாடல் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

“அரபி குத்து” பாடல் பற்றிய புரொமோ வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் நெல்சன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் இருந்தனர். “அரபி குத்து” பாடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாடலாசிரியர் .

இசையமைப்பாளர் அனிருத் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட இந்த “அரபி குத்து” பாடலின் ப்ரோமோ வீடியோவில் அவர் “விவேகம்”படத்திற்காக வாங்கிய விருது ஒன்று இருந்தது. அந்த விருதில் நடிகர் “அஜித்குமார்” ஸ்டில் இருக்க விஜய்யின் “பீஸ்ட்” வீடியோவில் ‘அஜித்’ என அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அஜித் குமார் நடித்த “வலிமை” திரைப்படம் இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1695

8

2