விஜய்யை ‘விக்’ தலனு வம்பிழுத்த பயில்வான்… உனக்கு அவ்ளோதான் லிமிட்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!
Author: Vignesh25 மே 2023, 3:33 மணி
நடிகர் விஜய் கமர்ஷியல் கிங்க்காக தென்னிந்திய தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். தற்போது நடிகர் விஜய் லியோ என்ற திரைப்படத்தில் லோகேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், லியோ திரைப்படமும் வசூலை வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் தற்போது விஜய்யை குறித்து பேசி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, நடிகர் விஜய் 7 வருடத்திற்கு மேலாக படங்களில் விக் வைத்து தான் நடித்து வருவதாகவும், அவரது தந்தைக்கு வயசானாலும், அவருக்கு முடி உதிராமல் இருக்கிறது என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.
ஆனால் நடிகர் விஜய்க்கு இந்த வயதிலேயே முடி உதிர அவர் ரசாயனம் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்தியது தான் காரணம் என்றும், உலகநாயகனுக்கும் இதுபோன்ற பிரச்சனை வந்த நிலையில், அவர் சுதாரித்துக்கொண்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று முடியை மீண்டும் வளர்த்துக்கொண்டார் என தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கும் முடி கொட்டிவிட்டது என்றும், ஆனால் ரஜினி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் வழுக்கை தலை உடனே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்றும, ஆனால் விஜய் விக் வைத்துக் கொண்டு தான் பொது வெளியில் வலம் வருகிறார் என தெரிவித்துள்ளார்.
மேலும், விக் வைப்பது தவறல்ல என்றும், சினிமா பிரபலங்களுக்கு அது சாதாரண விஷயம் தான் எனவும், ஆனால் விஜய் விக் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், விஜய் விதவிதமான விக்கை பயன்படுத்துவதாகவும், தயவு செய்து ஒரே விக்கை வைத்து பழகுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.
இதற்கு, உதாரணத்துக்கு பனையூரில் ரசிகர்களை அண்மையில் சந்திக்க வந்தபோது நீண்ட முடியுடன் கூடிய விக்கை விஜய் அணிந்து வந்ததாக பயில்வான் அதில் தெரிவித்து உள்ளார்.
மேலும், பயில்வானின் இந்த பேச்சை கேட்ட தளபதி ரசிகர்கள் தெறி பட சமயத்திலேயே விஜய் முடிக்கு சிகிச்சை எடுத்து வளர்த்துக் கொண்டதாகவும், ஒரிஜினல் முடிக்கும், விக்கிற்கும் வித்தியாசம் தெரியாமல் பேசாத, உனக்கு அவ்வளவு தான் லிமிட்டு என கண்டபடிக்கு வறுத்தெடுத்து உள்ளனர்.
1
0