சினிமா கேரியரில் விஜய் நடிக்காத கதாபாத்திரம்: தளபதி 67 குறித்து சஸ்பென்ஸ் உடைத்த இயக்குநர்..!

Author: Vignesh
5 October 2022, 9:30 pm
vijay - Updatenews360
Quick Share

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாரிசு படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டியராஜ். இதுவரை பல்வேறு வெற்றிப்படங்களை தந்துள்ள இவர் சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது விரைவில் நடிகர் விஜய்யை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி மேலும், தளபதி விஜய்யை இதுவரை 2 முறை சந்தித்ததாகவும், அவருக்காக சிறப்பான கதையை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இதுவரை பார்க்காத கேரக்டரில் விஜய்யை பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய்யை யாரும் பார்க்காத கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பதால், மிகவும் உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் இணைவது இன்னும் அதிக நாட்கள் எடுக்கும் என்று தான் சொல்லப்படுகிறது. ஏனென்றால், இவர் அடுத்ததாக ‘தளபதி 67’ என்று கூறப்படுகிறது.

Views: - 484

0

0