ஷாருக்கான் வீட்டின் கரண்ட் பில் எவ்வளவு தெரியுமா… கேட்டதும் ஷாக் அடிச்சுடும்!

Author: Shree
24 July 2023, 2:36 pm

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கான் இந்தி சினிமா உலகத்தில் நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் 1980களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார். அதன் பின்னர் 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து உலகம் முழுக்க பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்தார்.

தொடர்ந்து பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் ஷாருக்கான் வீட்டின் கரண்ட் பில் தொகை குறித்த தகவல் ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆம், நடிகர் ஷாருக்கான் வீட்டின் கரண்ட் பில் ரூ. 45 லட்சம் என கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்டு எல்லோரும் செம ஷாக் ஆகிவிட்டார்கள். ஆத்தாடி லட்சத்தில் கரண்ட் பில் கட்டும் அந்த வீட்டில் என்ன என்ன பிரம்மிக்கதக்க விஷயங்கள் இருக்கும் என யோசித்து பாருங்கள். அப்பாடி நினைந்து பார்த்தாலே தலை சுத்துது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!