துணிவு படத்தின் அடுத்த அப்டேட்… தெறிக்க விட்ட போனி கபூர் : பதிவை பார்த்ததும் பதறிப் போன ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 December 2022, 5:31 pm
Boney - Updatenews360
Quick Share

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘துணிவு’. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ள நிலையில், ஒரு புதிய அப்டேட் வருகிற 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார். AK AK AK என டைப் செய்து வெளியாகியுள்ள அந்த ட்விட்டை ரசிகர்கள் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர்.

மீண்டும் GANGSTAA பாடலின் லிங்கை போட்டுள்ளதால் கடுப்பான ரசிகர்கள், புதிய அப்டேட் என நினைத்து பார்த்து ஏமாந்துவிட்டோம் என போனிகபூரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Views: - 503

2

0