அஜித்தை வைத்து படம் பண்ணும் ஆசையே வரக்கூடாது : இயக்குநர் ஹெச்.வினோத் கருத்தால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 2:02 pm
Ajith H vinoth - Updatenews360
Quick Share

பிரபல இயக்குனர் வினோத் துணிவு ( Thunivu ) திரைப்படம் குறித்தான தனது அனுபவங்களை ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கிறது.

இந்த பேட்டியில் பல்வேறு விதமான கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டன. முக்கியமாக அஜித் குமார் போன்ற ஒரு பெரிய நடிகரின் படத்தை இயக்கும் பொழுது.. எங்கு திரும்பினாலும்.., படம் எப்படி வந்திருக்கிறது..? படம் எப்படி இருக்கிறது..? படம் என்ன நிலையில் இருக்கிறது..? இப்படியான கேள்விகளை எதிர் கொள்கிறீர்கள்.

இப்படியான எதிர்பார்ப்புகள்.. ஒரு இயக்குனராக உங்களுக்கு அழுத்தத்தை கொடுக்கிறதா..? அதை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கூறுங்கள் என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த இயக்குனர் வினோத். நாம் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்.. நமக்கென்று ஒரு யோசனை இருக்கிறது.. படம் இப்படித்தான் வர வேண்டும் என்ற சிந்தனை இருக்கிறது.. ஆனால் ரசிகர்களின் யோசனை என்ன..? ரசிகர்களின் தன்மை என்ன..? படம் யாரை சென்று சேரப்போகிறது..? அவர்களுடைய எதிர்பார்ப்பு என்ன..? இதையெல்லாம் கலந்துதான் ஒரு படத்தை ஒரு இயக்குனராக இயக்க வேண்டியிருக்கிறது.

ஒரு தரப்பு ரசிகர்கள் மங்காத்தா போன்ற படத்தை எதிர்ப்பார்ப்பார்கள். ஒரு தரப்பு ரசிகர்கள் பில்லா போன்ற படத்தை எதிர்ப்பார்ப்பார்கள். இன்னும் சில ரசிகர்கள் விசுவாசம் போன்ற படத்தை எதிர்பார்ப்பார்கள்.

இப்படியான எதிர்பார்ப்புகளை எல்லாம் தாண்டி மார்க்கெட் என்ற ஒன்று இருக்கிறது. பெரிய நடிகர்.. பெரிய இசையமைப்பாளர்.. பெரிய தயாரிப்பு நிறுவனம்.. பெரிய பட்ஜெட்.. என என்னதான் பெரிது பெரிதாக இருந்தாலும் அவை அனைத்துமே ஒரு வியாபார நோக்கத்திற்காக தான் என்பது உச்சகட்ட உண்மை.

இந்த படத்தை வியாபாரம் செய்ய தான் நாங்கள் தயாரிக்கும்.. இயக்குகிறோம். அப்போது மார்க்கெட் நிலவரம் என்ன..? திரையரங்க உரிமையாளர்கள் எப்படியான படத்தை எதிர்பார்க்கிறார்கள்..? எப்படியான படம் நிலைத்து நிற்கிறது.. வெற்றிபெறுகிறது.. இதையெல்லாம் பல விஷயங்களில் யோசித்து ஒரு படத்தை இயக்க வேண்டியிருக்கிறது.

துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. என்னதான் கமர்ஷியலாக இருந்தாலும் கூட படத்தின் வியாபாரத்திற்காக தவறான ஒரு முயற்சியை அல்லது தவறான ஒரு தகவலை படத்தை பார்க்க கூடிய வர்களிடம் கொண்டு சேர்த்த விடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

Views: - 415

4

2