மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகனின் ரீ-என்ட்ரி… அறிவிப்பிலே ஒரு ட்விஸ்ட்..!

Author: Vignesh
16 April 2024, 6:44 pm
Thirumurugan
Quick Share

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 2002 ஆம் ஆண்டு டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்த தொடர் ‘மெட்டி ஒலி’.

metti oli -updatenews360

அந்த வகையில், சன் டிவியில் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருந்த மெட்டிஒலி தொடர் 2002 ஆம் ஆண்டு திருமுருகன் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பானது. இந்த மெட்டிஒலி தொடர் 2005 ஆம் ஆண்டு வரை 811 எபிசோடு வெற்றிகரமாக ஓடியது.

metti oli -updatenews360

மேலும் படிக்க: கலாநிதி மாறன் பொண்ண பாத்தா நமக்கு BP ஏறுது.. வைரலாகும் ரஜினி சொன்ன வார்த்தை..!(Video)

இதில் ஒரு தந்தைக்கு ஐந்து மகள்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர் படும் கஷ்டங்களை இந்த தொடரில் முக்கிய கருவாக இருந்தது. இந்த தொடர் ஒரு காலகட்டத்தில் காலத்தில் டாப்பில் இருந்தது என்றே சொல்லலாம். கொரோனா காலகட்டத்தில் கூட இந்த தொடர் ரீ டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. அப்போதும், ரசிகர்களால் சீரியல் வரவேற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

metti oli -updatenews360

தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால் தமிழ் சினிமாவில் பரத் நடித்த எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, ஆகிய திரைப்படங்களை இயக்கிய திருமுருகன் படங்களை தாண்டி இவர் இயக்கிய மெட்டி ஒலி, நாதஸ்வரம், தேன்நிலவு, குலதெய்வம், கல்யாண வீடு, ஆகிய அனைத்து சீரியல்களுமே மக்களிடம் செம ஹிட்டுதான். கடந்த 2020 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் கடைசியாக கல்யாண வீடு சீரியல் முடிவடைந்தது.

Thirumurugan

மேலும் படிக்க: மௌன ராகம் 2 சீரியல் ஜோடிக்கு நிச்சயதார்த்தம்.. வெளியிட்ட க்யூட் போட்டோ..!(Video)

இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தில் திருமுருகன் ஒரு புதிய ப்ராஜெக்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, அந்த ப்ராஜெக்ட் தொலைக்காட்சிகளில் வராது என்றும், தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை கேட்டதும் ரசிகர்கள் அவரது அடுத்த ப்ராஜெக்ட் எப்படி இருக்க போகிறது என்பதை காண ஆவலாக உள்ளனர்.

Views: - 100

0

0