அரசனை நம்பி புருஷனை கைவிட்ட சீரியல் நடிகை : விவாகரத்திற்கு வெளியான காரணம் இதுதான்?!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2022, 9:58 am

பொதுவாக நடிகைகள் திருமணம் செய்வதும், பின்னர் விவாகரத்து செய்வதும் வாடிக்கையான ஒன்று. இது வெள்ளித்திரைக்கும், சின்னத்திரைக்கும் விதிவிலக்கல்ல.

பிரபல தொலைக்காட்சி சீரியலான பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் பிரபலமான நடிகை மேக்னா வின்செண்ட். சமீபத்தில் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதற்கு காரணம் இந்த நடிகர் தான் என்று மேக்னாவுடன் சேர்ந்து ஜோடியாக நடித்த விக்கி என்கிறார்கள். திருமணமாகியும் ஒன்றாக நடித்ததால் தான் கணவருக்கு விவாகரத்து கொடுத்தார் என்றும் நடிகர் விக்கியும் தன் மனைவியை விவாகரத்து செய்தார் என்று கூறப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் தன் விவாகரத்து பற்றி பேட்டியொன்றில் காட்டமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி நடிகை கூறும போது, என் விவாகரத்து என் விருப்பத்தோடு நடந்தது. அதற்கான காரணத்தை நான் ஏன் கூற வேண்டும்.

முடிந்த விஷயத்தை பற்றி பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. இது பற்றி இனிமேல் யாரும் கேட்க வேண்டும். இது என்னுடைய வாழ்க்கை என்று ஊடகத்தை கடுமையாக தி ட்டித் தீர்த்துள்ளார். இந்த கோபத்திற்கு காரணம் நடிகர் விக்கியா என்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் சென்றுள்ளார்.

அதுமட்டுமின்றி நடிகர் விக்கியும் நடிகை மேக்னாவும் ஆகிய இருவரும் எங்களுக்குள் காதல் ஒன்றும் இல்லை, நாங்கள் நண்பர்கள் என்று கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே பிரபலங்கள் இதுபோன்ற விவாகரத்து விஷயங்களில் அதிகமாக ஆர்வத்தை காட்டுவதால் இந்த செய்தியும் தற்போது தீயாய் பரவிவருகிறது.

ஆனாலும் சில ரசிகர்கள் இது அவர்களது சொந்த வாழ்க்கை அவர்களது விருப்பம் போல் செய்யலாம் என விமர்சனத்தை முன்வைக்கின்றர்.

  • Comedy Actor Goundamani Wife's sudden death மனைவி திடீர் மரணம் : கதறி அழுத கவுண்டமணி…!!