அஜித் உடன் வெங்கட் பிரபு செம சண்டை… பழி வாங்க தான் விஜய் படத்தை இயக்குகிறாரா?

Author: Shree
24 May 2023, 7:42 am
ajith vijay venkat prabhu
Quick Share

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . இதில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா, கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.

இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாக உள்ளதால். குறிப்பாக சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் போன்று தளபதி 68 அரசியல் பேசும் படமாக அமையலாம் என எதிர்பார்க்கலாம்.

மேலும் வெங்கட் பிரபு படம் என்றாலே அதன் பின்னணியில் Game, Sixer, Reunion, Politics, Diet, Holiday, Hangover, Quickie, Hunt போன்ற ஆங்கில வார்த்தைகள் இருக்கும் அந்த வகையில் இந்த படத்திற்கு அவர் என்ன ஆங்கில டைட்டில் வைக்கப்போகிறார் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, வெங்கட் பிரபு அண்மையில் அஜித்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தாராம். இது அஜித்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால் வெங்கட் பிரபுவை அஜித் திட்டிவிட்டராம். இந்த சமயத்தில் தான் மாநாடு திரைப்படம் வெளியாகி சக்கைபோடு போட்டது.

அரசியலில் தடம் பதிக்க எதிர்பார்த்து காத்திருக்கும் விஜய்க்கு மாநாடு படத்தை பார்த்ததும் வெங்கட் பிரபுவை வீட்டிற்கு அழைத்து இதே போல் எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க என கேட்க இது தான் சரியான சமயம் என்று உடனே ஒரு அரசியல் கதையை தயார் செய்து தளபதி 68 படத்தை ஆரம்பித்தார். இப்படுத்தான் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி ஆரம்பித்தது.

Views: - 392

0

0