சர்ச்சைகளுக்கு நடுவில் Thug Life ஸ்பாட்டில் த்ரிஷா.. ட்ரெண்டாகும் மாஸ் இன்ஸ்டா பதிவு..!
Author: Vignesh21 February 2024, 6:32 pm
உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.
திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். இரண்டுக்கும் மேற்பட்ட விவகாரத்து , பல நடிகைகளுடன் ரகசிய உறவு என இருந்த கமல் ஹாசன் தற்போது தலைமையில் தான் வாழ்ந்து வருகிறார். வயது 69 ஆகியும் நடிப்பு,தொலைக்காட்சி, அரசியல் என படு பிஸியாக இருந்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து இளம் ஹீரோக்களுக்கு திகில் கொடுத்து வருகிறார்.
தற்போது கமல் தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “தக்லைஃப்” படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த கூட்டணி ஏற்கனவே நாயகன் படத்தின் மிகப்பெரிய கிளாசிக் ஹிட் கொடுத்தனர். எத்தனை டான் படம் வந்தாலும் நாயகன் படத்தின் சாயல் இல்லாமல் இருக்காது.எனவே இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தக்லைஃப் படத்தில் தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்நிலையில், இந்த படத்தில் புதிதாக தென்னிந்திய சென்சேஷனல் நடிகை மிருணாள் தாகூர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இவர் சீதாராமன் போன்ற படங்களில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர். மிருணாள் தாகூர் இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் பேட்டி கொடுக்கையில் த்ரிஷா குறித்து மிகவும் மோசமாக பேசியது, சர்ச்சையான நிலையில், இதுகுறித்து பேசிய த்ரிஷா இப்படிப்பட்டவர்கள் எந்த அளவுக்கும் இறங்குவார்கள். அருவருப்பாக இருக்கிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என த்ரிஷா கூறியிருந்தார்.
அதை தொடர்ந்து, அந்த நபர் மன்னிப்பு கேட்டு வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இந்த சர்ச்சை ஒரு புறம் இருக்க த்ரிஷா தற்போது, தக்லைஃப் படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். தக் லைஃப் பட சீன் பேப்பர் கையில் இருக்கும் போட்டோவை திரிஷா வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது