இயக்குனராக களமிறங்கும் விஜய் ஆண்டனி…அதுவும் இந்த Blockbuster படத்தின் Sequel-க்கா ?

Author: Udayaraman
24 July 2021, 5:06 pm
Quick Share

இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், நான் படத்தின் மூலமாகவே ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். தொடர்ந்து, சலீம், இந்தியா பாகிஸ்தான், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என்று எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் பிச்சைக்காரன் படம் மட்டுமே விஜய் ஆண்டனியை சிறந்த நடிகராக காட்டியுள்ளது. இந்தப் படத்தின் மூலமாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்.

தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன் மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. பிச்சைக்காரன் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் கூட அப்போதே உருவாக இருப்பதாக பேசப்பட்டது. தற்போது அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பிச்சைக்காரன் 2 படத்தின் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ள விஜய் ஆண்டனி, மனதிற்கு நெருக்கமான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தின் போஸ்டர். இந்த படத்தில் இயக்குனராக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என ட்வீட்டில் கூறியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு படங்களால் சமீப காலமாக அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூடியுள்ளனர். மேலும் இந்தப் படத்தின் போஸ்டரை பார்த்த அந்த ரசிகர்கள் குதூகலத்தில் வெறி கொண்டு காத்து கிடக்கின்றனர்.

Views: - 258

1

0