விஜய் என்ன புடுங்கிட்டு இருக்கிறார்? மன்சூர் அலிகான் விஷயத்தில் மௌனம் காக்கும் விஜய் – கொந்தளித்த திரிஷா ரசிகர்கள்!
Author: Shree19 நவம்பர் 2023, 8:55 காலை
தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாகவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.
இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ படத்தில் வில்லனாக நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து மிகவும் கொச்சையாக முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ளார். அதாவது லியோ படத்தில் வில்லனான என்னை திரிஷாவை கற்பழிக்கவே விடல… காஷ்மீர் பணியில் அவரின் பஞ்சு மேனி பார்க்கவே ரொம்ப அழகா இருந்தது.
திரிஷாவை கட்டிலில் தூக்கிப்போட்டு அவரை கற்பழிக்கும் சீன் பண்ணனும்னு எனக்கும் ஆசையா இருந்துச்சு என்றெல்லாம் கொச்சையாக முகசுளிக்கும் வகையில் பேசி ஒட்டுமொத்த திரையுலத்தையே தலைகுனிய வைத்துள்ளார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு திரையுலகத்தை சேர்ந்த பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
“நாங்கள் அனைவரும் ஒரே அணியில் பணியாற்றியதால், திரு. மன்சூர் அலி கான் கூறிய பெண் வெறுப்புக் கருத்துக்களைக் கேட்டு மனமுடைந்து கோபமடைந்தோம். பெண்கள், சக கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான மரியாதை எந்தத் துறையிலும் பேச்சுவார்த்தைக்குட்படாத ஒன்றாக இருக்க வேண்டும், இந்த நடத்தையை நான் முற்றிலும் கண்டிக்கிறேன் என பதிவிட்டு கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது வரை விஜய் இது குறித்து வாய்திறக்காமல் இருந்து வருவதை பலர் கண்டித்துள்ளனர். குறிப்பாக திரிஷாவின் ரசிகர்கள் ஒருவர், ” 80’s சினிமா நடிகைகளான ஸ்ரீபிரியா போன்ற நடிகைகள் பற்றி தவறான செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைக்கு முதல் கண்டனம் தெரிவிச்சதே ரஜினி தான்.
அப்படியிருக்கும் போது தன்னோட நடிச்ச சக நடிகைக்கு ஏற்பட்ட அவமானத்தை கண்டும் விஜய் என்ன புடுங்கிட்டு இருக்காரா? இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை? ரஜினி மாதிரி இல்ல – ரஜினி கால் துசுக்கு கூட விஜய் ஈடாக முடியாது என விஜய்யை விமர்சித்துள்ளனர்.
And Lokesh said he liked the mannerisms of this guy. Nice 👍🏻pic.twitter.com/wggwVg30Jy
— SFC么ÉAGLÉᴶᴬᴵᴸᴱᴿ (@EuphoricEagle19) November 18, 2023
0
0