‘தல’னு சொன்னதும் கத்தி கூச்சல் போட்ட மாணவர்கள்: “நாம என்ன பேசிக்கிட்டு இருக்கோம், நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கிங்க”.. கடுப்பான பிரபல நடிகர்..!

Author: Vignesh
3 October 2022, 9:16 am
ajith - updatenews360-2
Quick Share

மாணவர்கள் கத்தியதால் கடுப்பான விஜய் சேதுபதி, தேவையில்லாம கத்தாதீங்க… நாம என்ன பேசிக்கிட்டு இருக்கோம், நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கிங்க என கோபமாக கேட்டார்.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது பிசியான வில்லன் நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் தயாராகி வருகிறது. அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் தான் நடைபெற்று வருகிறது.

இதனிடையே சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“யார் மீது கோபம் வந்தாலும் வெளிக்காட்டாதீர்கள். ஏனென்றால் டைம் இருக்கு. இன்னைக்கு என்னோடு சண்டை போட்டவனை கல்லூரி முடித்த பின்னர் சந்திக்கும்போது அவன் எனக்கு நண்பனாகிறான். எல்லாத்துக்கும் டைம் கொடுங்க. உடனே எதிர்வினையாற்ற வேண்டாம். நாம் உடல்ரீதியாக வளர்வதனால் பெரிய ஆள் என நினைக்காதீர்கள்.

இன்றைக்கு இருக்கும் வியாபார உலகம் உங்களுடைய நேரங்களை திருடுவதற்கு தயாராக இருக்கிறது. உங்கள் நேரத்தை எந்த வகையில் திருடலாம், உங்க மூளைய செயல்படவிடாமல் செய்வது எப்படி என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைதளங்கள் வாயிலாக சண்டை போட்டுக்கலாம், அசிங்கமா பேசிக்கலாம்னு உங்களுக்கு சுதந்திரம் கொடுத்த மாதிரி நடிக்கிறாங்க நம்பீடாதீங்க.

டெக்னாலஜி உங்கள திங்க பாக்குது. உங்கள பயன்படுத்த வைத்து மார்க்கெட்டிங் செய்து காசு சம்பாதிக்கலாம்னு பாக்குறாங்க. என்னெல்லாம் சாப்பிட வைக்கலாம். எதெல்லாம் சாப்பிட்டா நீங்க நோயாளி ஆகுவீங்க. நோயாளி ஆனா என்ன மருந்து சாப்பிடுவீங்க. எவ்ளோ நாள் நோயாளியா உங்கள கஷ்டப்பட வைக்க முடியும், உங்கள எப்படி ஆட்கொள்ளலாம் அப்டிங்குறதுல இந்த உலகம் ரொம்ப ஆர்வமா இருக்கு. நம்மள மயக்குவாங்க ஜாக்கிரதையா இருக்கனும்.

இவ்வாறு மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் பேசிய விஜய் சேதுபதி, இறுதியாக

“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை”

என்கிற திருக்குறளை கூறினார்.

இதில் கடைசியாக அவர் தலை என கூறியதை கேட்டதும் அங்கிருந்த அஜித் ரசிகர்கள் கத்தி கூச்சல் போட்டனர். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி, தேவையில்லாம கத்தாதீங்க… நாம என்ன பேசிக்கிட்டு இருக்கோம், நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கிங்க” என கோபமாக கேட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 421

0

0