‘லியோ’ வில் சம்பவம் செய்யப்போகும் விஜய் சேதுபதி – மீண்டும் இணைந்த மாஸ் கம்போ!

Author: Shree
5 April 2023, 5:31 pm
vijay
Quick Share

கைதி , மாஸ்டர் , விக்ரம் என தொடர் வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கிறார்.

ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்றதை தொடர்ந்து மீதமுள்ள காட்சிகளை சென்னையில் படமாக்க உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் மாசான தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை டபுள் தமாக்கா குஷியில் கொண்டாட வைத்துள்ளது. ஆம், லியோ படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துள்ளாராம்.

ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் வெளியான மிஸ்டர் படத்தில் விஜய்யுடன் மோதிய விஜய் சேதுபதி மெர்சலாக்கினார். இந்நிலையில் லியோ படத்தில் அவர் நடிகராக கமிட் ஆகவில்லையாம். மாறாக பின்னணி குரல் கொடுப்பதற்காக லோகேஷ் அணுகி மூன்று நாட்கள் கால்ஷீட் கேட்டு வங்கியுள்ளாராம். இது குறித்து அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.

Views: - 321

0

0