செத்தா இப்படி சாகணும்யா.. விஜயகாந்த் சொன்னது அவருக்கே நடந்தது; கண்கலங்கிய பிரபலம்..!

Author: Vignesh
10 January 2024, 4:51 pm
Quick Share

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Vijayakanth

இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள். தொடர்ந்து விஜயகாந்த் செய்த பல்வேறு நற்பணிகள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள், திரைதுரைசேர்ந்த பலருக்கு வாழ்வளித்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விஜயகாந்த் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ஆம், விஜயகாந்த் எம்ஜிஆரின் தீவிர ரசிகராம். அவரின் வெறியனாக அவரது திரைப்படங்களை பார்த்து ரசித்து வளர்ந்தவர் தானாம் விஜயகாந்த். அப்படிதான், பல வருடங்களுக்கு முன் விஜயகாந்த் பேட்டி ஒன்றில், ” என் வீட்டுக்கு அருகே எங்க வீட்டு பிள்ளை படம் ஓடியபோது சண்டை காட்சிகளுக்காகவே 120 முறை பார்த்தேன்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன், மகாதேவி, அரசிளங்குமாரி போன்ற படங்களில் வரும் சண்டைக்காட்சிகள் அதன்பின் அவர் படங்களில் இல்லையே என நினைத்தேன். அப்போது வந்த படம்தான் ஆயிரத்தில் ஒருவன். 1965ல் வெளிவந்த அந்த படத்தை 70 முறை பார்த்தேன். நான் எம்.ஜி.ஆரின் ரசிகன் இல்லை.. வெறியன்’ என கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு சினிமா மீது அவர் வைத்திருந்த காதல் தான் பின்னாளில் உச்ச நடிகராக உயர்த்தியுள்ளது.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளரான டி.சிவா விஜயகாந்த் குறித்த ஒரு சம்பவத்தை கூறியுள்ளார். அதாவது, விஜயகாந்த் இறந்தபோது தீவுத்திடலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்கள். இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே வண்டியை நிறுத்திவிட்டு சென்று பார்ப்பதை கவனித்தேன்.

vijayakanth-updatenews360

எம்ஜிஆர் இறந்தபோது அவரைப் பார்க்க ஏராளமானோர் கண்ணீருடன் சென்றார்கள். மக்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுது கொண்டு செல்வதை பார்த்த விஜயகாந்த் ஒன்று சொன்னது என் நினைவில் இருக்கிறது. செத்தா இப்படி சாகணும்யா என விஜயகாந்த் சொன்னார். அவர் சொன்னது தற்போது அவருக்கே நடந்தது என்று டி சிவா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Views: - 142

0

0