பல பேருடன் உறவில் இருந்திருக்கேன் … கூச்சப்பட என்ன இருக்கு? பளீச்சின்னு சொன்ன அதிதி பாலன்!

Author: Rajesh
10 January 2024, 4:59 pm

ஒரு சில நடிகைகள் மட்டும் தனக்கிருக்கும் திறமைகளின் மூலம் ரசிகர்கள் மனதில் ஓரிரு படத்திலே நல்ல ஆழமான இடத்தை பிடித்துவிடுவார்கள். அப்படித்தான் நடிகை அதிதி பாலன் அருவி திரைப்படத்தில் ஒட்டுமொத்த திரைவிரும்பிகளையும் யார் இந்த பெண்? என்று திரும்பி பார்க்க செய்தார். பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளான தோற்றத்தில் நல்ல அழுத்தமான ரோலில் அப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வரும் அதிதி பாலன் முதன் முதலில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் ஒரு சிறிய முகம் அறியப்படாத ரோலில் நடித்திருந்தார். பின்னர் அருவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய அவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருது வென்றார்.

தொடர்ந்து குட்டி கதை, குளிர் வழக்கு, படவெட்டு , சாகுந்தலம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் அதெல்லாம் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. இந்நிலையில் தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டிகளில் பங்கேற்று வரும் அதிதி பாலன்,

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதல் சமாச்சாரங்களை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது, ” ஸ்கூல் படிக்கும் போதே காதலிக்கத் தொடங்கினேன். ஆனால், 2 மாதத்திலேயே அந்த முதல் காதல் பிரேக்கப் ஆகி விட்டது. அதன் பின்னர் பல பேரை காதலித்துள்ளேன். நிறைய ரிலேஷன்ஷிப், பிரேக்கப் என எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பது போன்று எனக்கும் பாஸ்ட் விஷயங்கள் நிறைய இருக்கு என்றார். சரி ஏன் தொடர்ந்து பிரேக்கப் செய்தீர்கள்? என்ன காரணம் என கேட்டதற்கு…

காதலிப்பவர்கள் ஒருவரை டார்ச்சர் செய்யக்கூடாது. ரிலேஷன்ஷிப்பில் ஒருத்தருக்கு பிடித்தது போல இன்னொருத்தரை மாற்ற முயற்சிக்கக் கூடாது. அப்படித்தார் நான் காதலித்த சிலர் என்னை டார்ச்சர் செய்துள்ளனர். நானும் சிலரை டார்ச்சர் செய்துள்ளேன். அதன் விளைவு தான் பல பிரிவுகளுக்கு காரணம் என மிகவும் வெளிப்படையாக பேசினார்.

  • New Update Announcement From Jana Naygan team Today ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!